வியாழக்கிழமை இணைய கரியாலயத்தில் சுய தொழில் முயற்சியாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், Happy Market, இணைய அங்கத்தவர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
அதில் சுயதொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் ஏற்படுகின்ற பிரச்சனைகளைத் தெரிவித்ததுடன், தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறையில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் தெரிவித்திருந்தனர்.
உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக றொற்றறிக் கழகத்தின் தலைவர் திரு.பிரசாந்தன் தெரிவித்தார். அத்துடன் தொழில் முயற்சியாளர்களின் முதலீட்டின் 25% ஐ றொற்றறிக் கழகம் சார்பாக வழங்குவதாகவும் 25% ஐ தொழில் முயற்சியாளர்கள் ஏற்றால் தான் அவர்களது பொறுப்ப அதிகரிக்கும் எனவும், மிகுதி 50% ற்கு வங்கிகளை நாடலாமெனவும், ஒரே வகையான தொழில்களை எல்லோரும் செய்யாமல் கலந்தரையாடி வேவ்வேறு தொழில்களைத் தேர்ந்தெடுதால் சந்தை வாய்ப்பு அதிகமெனவும் தெரிவித்தார்.
உதாரணமாக தற்பொழுது பல பெண்கள் மோட்டார் சைக்கிள் உபயோகிப்பதனால் அவற்றைக் கழுவுவதற்காக மட்டும் ஒரு இடத்தை ஒழுங்கு செய்து பெண்கள் வேலை செய்வதால் கூடுதலான பெண்கள் அதை நாடுவார்கள் எனவும் அதற்கான முதலீடு 600,000/= வரையில் தான் என்றும் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மக்கள் வங்கி, இலங்கை வங்கி உத்தியோகத்தர்களும் சுய தொழில் முனைவோருக்கான கடன் வசதிகள் தொடர்பாகவும் கடன்களை வழங்குவதில் உள்ள பிரச்சனைகளையும் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment