Thursday, March 7, 2019

தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911.
ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 106 ஆண்டுகள் முடிந்து விட்டன. பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.



அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர். பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் வெற்றியாய் உதித்ததே சர்வதேச பெண்கள் தினம். 1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...