Thursday, March 7, 2019

மும்மொழிக்கொள்கை தொடர்பான கலந்துரையாடல்

அரச கரும மொழிகளின் சமநிலை முன்னேற்றம் தொடர்பாக கனேடிய அரசுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் செய்யப்பட்ட உடன்படிக்கையின்
பிரகாரம் கனடா உயர் ஸ்தானிக கரியாலய உத்தியோகத்தர்களும், யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவன நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் 06.03.2019 அன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இணைய காரியாலயத்தில்நடைபெற்றது.






















அரச கரும மொழிகளை வலுப்படுத்தி, அமுலாக்குவதில் உள்ள பிரச்சனைகள், மொழிகளை உபயோகித்தல் தொடர்பான பிரச்சனைகள், தழிழாக்கத்தில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழைகள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டது. மொழி தொடர்பான பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்காக மாவட்ட மட்டத்தில் காரியாலயங்கள் நிறுவப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மொழிகள் கற்பதை திணிக்காமல் சுயாதீனமாக விட்டால் புதிய மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேசிய நிகழ்வுகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் மொழிகளுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட TRRO, JSAC, NCS, FRC, SOS, VOGT போன்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் தங்கள் நிறுவனங்களின் செயற்பாடுகளை எடுத்துரைத்தனர்.

No comments:

Post a Comment

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...