யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா : ஈழத்தமிழ் சினிமாவின் எழுச்சிக்கு உதவ வேண்டும்?
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்த்திற்காகவும் கலைகளைப் பயன்படுத்தும் பணித்திட்டங்கள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணித்திட்டங்கள் எல்லாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுதல் என்ற உயரிய நோக்கத்தில் தீட்டப்பட்ட திட்டங்களாகவும், அதற்காக வகுத்தமைக்கப்பட்ட செய்றதிட்டங்களாகவும் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த இலக்கு அடையப்பட்டதா? என்ற கேள்வியைக் கேட்டால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றிய கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுகளோ, ஆய்வுகளோ சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனலாம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் கலை, விளையாட்டு, வர்த்தகம், கல்வி போன்ற பல வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவை ஒவ்வொன்றும் பல நூறு மில்லியன் செலவில் நடைபெறும் செயற்திட்டங்களாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டப்பட்ட ஒரு பிரதேசத்தின் மீள்கட்டுமானம் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு சமூகத்தின் இயலாற்றலும், கொள்திறனும் அதிகரிக்கப்பட்டாலே மேற்சொன்ன பாரிய நிகழ்வுகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் பங்காளிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க முடியும். இந்தச் சூலலில் பாதிக்கப்பட்டவர்களின் மீள்நிர்மானத்திற்கும், மீள் எழுச்சிக்கும் முதலில் பாடுபட வேண்டும். யுத்தத்தின் அழிந்து போன நடவடிக்கைககளை மீளக்கண்டு பிடித்தல் பாதுகாத்தல் மற்றும் வளர்த்தெடுத்தல் போன்றதான செயற்பாடுகள் நடைபெற வேண்டியவையாகின்றன. இதற்கு நீண்டகாலமும், அரப்பணிப்பும் நிதிச்செலவுகளும் ஏற்படும். இவை கருத்தில் கொள்ளப்படுகின்ற போது தான் பாதிக்கப்பட்ட சமூகம் புத்துயிர்பெற்று வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்களைப் பெறமுடியும்.
இந்தச் சுழலில் வடபகுதியில் நடைபெற்ற கலைசார்ந்த தேசிய விழாக்களை அவதானித்த அடிப்படையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா சார்ந்த கருத்துக்களை முன்வைக்கின்றோம். இதில் கடந்த காலத்தில் நடைபெற்ற பாரிய இரண்டு செயற் திட்டங்கள் பற்றி நாம் இங்கு குறி;பிட்டாக வேண்டும்.
1. யாழ்ப்பாண இசை விழா (Jaffna Music festival)
2. Wings Art for Reconciliation programme (WINGs)
1. யாழ்ப்பாண இசை விழா (Jaffna Music festival)
2. Wings Art for Reconciliation programme (WINGs)
இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வலுப்படுத்தலுக்கான கலை சார்ந்த பணிக்காக பல நிதிக்கொடை நிறுவனங்களும், சர்வதேச அமைப்புக்கள், வெளிநாடுகளின் தூதுவராலயங்கள் போன்றவையும் பாரிய நிதியை வழங்கியிருந்தன. இந்தப்பாரிய நிதிகளை எந்தவொரு பாதிக்கப்பட்ட சமூகம் சார்ந்த அமைப்பும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்டையானதாகும். மாறாக கொழும்பை மையப்படுத்திய அமைப்புக்களே அவற்றைப் பெற்றுக் கொள்கின்றன.
இவ்வாறு கடந்த ஐந்தாண்டுகளில் பல நூறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்திட்டங்களின் மூலம் உள்ளுர் சமூகம் பயன் பெற்றிருக்க வேண்டும். ஒரு பிரதேசத்தில் இவ்வாறான பாரிய செலவிலான நிகழ்வுகள் நடைபெறும் போது ஆகக் குறைந்தது உள்ளுர் பொருளாதாரம் அதனால் பயனடைய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மேலிருந்து கீழ் வடிந்து வரும் (Trickled down theory) பொருளாதார செயல்முறை மூலம் அந்த நன்மை அடையப்பட முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் யாழ்ப்பாணம் மற்றும் வடபகுதியைப் பொறுத்தவரையில் இந்த பொருளாதாரப் பயன் கூட எந்தவொரு தேசிய நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றபோதும் கிடைக்க வில்லை எனலாம். எல்லாப் பொருளாதார நன்மைகளும் கொழும்பை மையப்படுத்தியதாகவே திட்டமிடப்பட்டன. அனைத்துப் பொருளாதாரப் பயன்களும் தென்பகுதிக்கு சென்றடைவதை நோக்காகக் கொண்டே செயற்படுத்தப்பட்டன தற்போதும் செயல் படுத்தப்படுகின்றன.
இந்தப் பாரிய செயற் திட்டங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மையும்இ வகைகூறலும் காணப்படுவதில்லை. அதே போன்று பாதிக்கப்பட்டவர்களான வடபுலத்தவர்கள் பங்காளிகளாக இணைக்கப்படுவதோ மற்றும் அவர்கள் அந்தத் திட்டத்தை சொந்தம் கொண்டாடுவதற்கோ வாய்ப்பளிக்கப்படுவதில்லை. மாறாக பாரிய திட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகத்தவர்களில் ஒரு சிலர் வெறும் கூலிகளாகவே நியமிக்கப்படுகின்றார்கள். அவர்களை பங்காளிகளென்று காட்ட முற்படுகிறார்கள். இதனால் எமது பகுதியின் இயலாற்றலும் கொள்திறனும் வளர்த்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போகின்றன. அதே நேரம் பௌதீக வளங்களும் கூட விருத்தியாக்கப்படுவதில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மேலே சொல்லப்பட்ட மிகப்பிரமாண்டமான கலைசார்ந்த செயற்திட்டங்கள் பல நூறு மில்லியன் ரூபா செலவில் நடைபெற்றவையாகும். இதில் அண்மையில் நடைபெற்ற கலையூடான இனங்களுக்கிடையிலான மீள்நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் நடைபெற்ற விங்ஸ் நிகழ்ச்சித்திட்டம் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் நடைபெற்றதாகும். இதற்கு 270 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டது. இதில் ஐந்து தொடக்கம் பத்து வீதமான நிதி மட்டுமே வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் செலவிடப்பட்டிருக்கிறது. மீதமான 90 வீதமான பணமும் கொழும்பை மையப்படுத்தியே செலவிடப்பட்டிருக்கின்றது. இந்தச் செயற்திட்டம் நாம் மேலே சொன்ன விடங்களை தெளிவாக்குவதற்கான சிறந்ததொரு உதாரணமாகும்.
மீள்நல்லிணக்கம் என்பது பாதிக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளவரை கைகொடுத்து மேலே தூக்கி எடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடாகும். இலங்கையில் வேடிக்கையான செயலாக இந்தச் செயல்முறை தலைகீழாக நடக்கிறது. பாதிக்கப்பட்டவர் அதே நிலையில் இருக்க அவர் இயல்பு நிலையில் இருப்பதான கற்பனைத் தோற்றத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவரைச் சமநிலையில் வைத்து போட்டி அடிப்படையில் செயற் திட்டங்களை அணுகுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த சமநிலையில் உள்ள இருவருக்கிடையில் நடைnறுவதான தோற்றப்பாட்டுடன் நடைபெறும் போட்டியில் ஏலவே இயல்பு நிலையில் காணப்பட்ட வலுவான் நிலையில் காணப்பட்ட தென்பகுதிச் சமூகம் பயனடையுமாறு செயற் திட்டம் சார்பு நிலைபெறும் துயரம் நடக்கிறது. குறிப்பாக கொழும்பில் மையம் கொள்வதான பிராந்தியச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
நல்லிணக்கச் செயற்பாடு என்பது இரண்டு சமநிலையில் உள்ள தரப்பினர் சமதளத்தில் நின்று கைகொடுத்து கொள்வது என்று வரையறுக்க முடியும். ஒருவர் மேல்நிலையிலும், இன்னொருவர் கீழ்நிலையிலும் இருந்து கொண்டு சமவாய்ப்புப் பற்றியும், நல்லிணக்கம் பற்றியும் பேசமுடியாது. இந்த சமனற்ற சுழலில் யுத்தத்தினால் பாதிக்கப்படாத, இயல்பு நிலையில் உள்ள தென்பகுதிச் சமூகம் தனது மேல்நிலையான நன்கு தேர்ச்சி பெற்ற தனது கொள்திறனாலும், இயலாற்றலாலும் (Capacity & Skill) இலகுவாக ஆங்காகாங்கே கிடைக்கின்ற வளங்களை தமதாக்கிக்க கொள்கின்றார்கள். தமது செயற்திட்டங்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பானதான தோற்றத்தை உருவாக்குவதற்காக முகவர்களைக் கூலிக்கமர்த்தி தமது செய்றதிட்டம் வெற்றி பெற்றதாகக் காட்டுகிறார்கள் அல்லது காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே தொடர்ந்து நீடிக்கிறார்கள். இந்தச் சுழ்நிலையை 28 அமைப்புக்களை அங்கத்தவ நிறுவனமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் எப்போதும் கண்டித்து வந்திருக்கிறது.தொடர்ந்து தனது எதிர்ப்பபை; பதிவு செய்தும் வந்திருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்டவரின் பெயரால் யுத்தத்தினால் பாதிக்கப்படாத சமூகம் நன்மையடைவதான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நாம் எப்போதும் விமர்சனத்துக்குட்படுத்த வேண்டியதும். சந்தேகத்தோடு நோக்குவதும், எதிர்ப்பை பதிவு செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவ்வாறான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற நிதிக்கொடை நிறுவனங்களும சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள ஐ.நா சபை அமைப்புக்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வினையமாகக் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான செயற்திட்டங்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட சமூகம் நன்மையடைவதான செயற்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். பாதிக்கப்பட்ட சமூகம் தான் சார்ந்த ஒரு செயற்திட்டத்தில் தான் உண்மையான பங்காளியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், தான் அந்தச்செயற்திட்டத்தைச் சொந்தம் கொண்;டாட நினைப்பதும் தவறான எண்ணமென்று கருத முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப்பின்னணியிலேயே பல நிதிக்கொடை நிறுவனங்கள், ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் உயர்தானிகராலயங்கள், சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெறுகின்ற யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவையும் நோக்க வேண்டியுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவை யாழ்ப்பாணத்தின் அமைப்புக்களும், தனிநபர்களும் திட்டமிட்டு உரிமை கொண்டாடி நடத்துவதே பொருத்தமானதாகும். கொழும்பிலிருந்து திட்டமிடுவதை வெறுமனே நடைமுறைப்படுத்தும் கூலிகளாக அல்லாமல் பிராந்தியத்தில் தாமே திட்டமிட்டு நடத்தும் ஒன்றாக இது மாற்றம் பெற வேண்டும். அதன் மூலம் தான் இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சியைச் சாத்திக்க முடியும்.
எண்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழ் நாட்டின் நீண்ட சினிமா வரலாற்றோடு எமது சினிமாப்பாரம்பரியத்தையும் சமகாலத்தில் இனங்காண முடியும். குறிப்பாக நுகர்வு அடிப்படையில் அது ஆரம்பமாகி பின்னர் சுயமாக திரைப்படங்களைத் தயாரிப்பதாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அறுபது மற்றும் எழுபதுகளில் ஈழத்து தமிழ் சினிமாவில் தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால் யுத்தத்தினால் இந்தத் தொடர்ச்சி தடைப்பட்டு ‘இலங்கைச்சினிமா’ என்பது தனியனே ‘சிங்களச் சினிமா’ என்ற அடையாளப்படுத்தலுக்குட்பட்டது. இந்த அடையாளத்தின் நீட்சியாக ஈழத்தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கான வீரியமான வித்துக்களை உருவாக்கத்திற்கு தடையாக சினிமா சார்ந்த முயற்சிகளை கொழும்பை மையப்படுத்தியதாக திட்டமிடுவது எமக்கு பயன் தராத ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது.
அதே வேளை யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சினிமா சார்ந்த செய்றபாடுகள் குறிப்பாக ‘எமக்கான படங்களை நாங்களே தயாரித்தல்’ என்ற எண்ணத்தில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் குறும்திரைப்பட முயற்சிகள் அடியோடு தடைப்பட்டுள்ளன என்பதையும் மனங்கொள்ள வேண்டும். எழுபதுகளின் முயற்சிகள் மற்றும் யுத்தகால முயற்சிகளின் தொடர்ச்சியாக அவற்றிலிருந்து மேலும் வளர்ந்து செல்வதற்கான வாய்ப்பாகவே பெருமளவில் வளத்திரட்டலோடு நடைபெறும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அமையவேண்டும் என்று நாம் கருதுகின்றோம். மாறாக முற்றுமுழுதாக கொழும்பு சாரந்த திட்டமிடலும் அவர்களே வளங்களை திரட்டிக்கொள்வதுமான செயல்முறை நடக்கின்ற போது இது சாத்தியமாகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘இலங்கைச் சினிமா’ என்பது ‘சிங்களச் சினிமா’ என்ற அடையாளத்தை வலுப்படுத்துவதாகவே யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அமைந்திருக்கிறதோ? என்ற நியாயமான சந்தேகம் எமக்குள்ளது. இதனால் யாழ்ப்பாண திரைப்பட விழா ஈழத் தமிழ் சினிமாவிற்கு ஊட்டம் சேர்ப்பதாக திட்டமிடப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். இதற்கேற்ப உள்ளுர் தன்மையோடு இது அமைதல் வேண்டும். தற்போது குறுகிய வட்டத்திற்குள் காணப்படும் இந்;த திரைப்பட விழா பெரியவட்டமாக மாற்றம் பெற வேண்டும். அவ்வாறாதொரு நிலைமை காணப்பட்டால்; தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் திரைப்பட விழா நடத்துவதான ஒவ்வாத நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு இல்லாது போகுமென்று நம்புகின்றோம்.
இந்த விழாவிற்கு ஆதரவு நல்குகின்ற நிதிக்கொடையாளர்களும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் போன்றன யாழ்ப்பாணத்திரைப்பட விழா வடபகுதி மக்களின் திரைப்பட விழாவாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். உள்ளுர் அமைப்புக்களின் உண்மையான பங்குபற்றுதலுடனும் அவர்களின் சொந்தம் கொண்டாடுதலுடனும்; நடைபெறுவதற்குரியதான ஏதுநிலையை உருவாக்க நாமெல்லோரும் பாடுபடுவோம். இதற்காக வெளிப்படைத்தன்மையுடனும் வகைகூறல் தன்மையுடனும் கூடிய செயல்திட்டங்கள் வகுத்தமைக்கப்பட வேண்டும். தற்போதுள்ளது போன்று தனிநபர்களோ, தனி அமைப்புக்களோ பயன்பெறும் வகையிலல்லாமல். தற்போது நடைபெறுவது போன்று மக்களுடன் தொடர்பற்றதாக இந்த விழா நடைபெறாமல் ஈழத்து தமிழ்சினிமாவின் மீள்எழுச்சிக்கு ஏற்றதான இயலாற்றலையும், கொள்திறனையும் வளர்த்தெடுப்பதற்குரியதாக இதனை மக்களின் விழாவாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

திரு. தேவநாயகம் தேவானந்த்
கௌரவ தலைவர்
யாழ் மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
கௌரவ தலைவர்
யாழ் மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
No comments:
Post a Comment