Friday, November 17, 2017

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் சட்ட ஏற்பாடுகளும்

10.11.2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் நடைபெற்ற பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் சட்ட ஏற்பாடுகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் விளக்கவுரைகளையும் தெளிவுரைகளையும் திருமதி.கோசலை மதன் (சிரேஷ்ட சட்ட விரிவரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)
அவர்கள் வழங்கியபோது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏன் அவசியம் எனில், இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் பெண்களாகக் காணப்படுவதனாலும், 1931 ம் ஆண்டில் இருந்து சர்வஜன வாக்குரிமையை அனுபவித்திருக்கிறோம் என்பதாலும் ஆகும். இன்று வரை பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எம்மால் அதிகரித்துக்கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவமாக இருந்தாலும் மாகாண சபை பிரதிநிதித்துவமாக இருந்தாலும், உள்ளூராட்சி மன்றமாக இருந்தாலும், இன்னும் அவை ஒரு பாரிய அளவு அதிகரிப்பை எட்டவில்லை. இலங்கையைப் பொறுத்த வரையில் 6




% இலும் குறைவாக தான் அரசியலில் பெண்கள் காணப்படுகிறார்கள். இவ்வாறான பிரச்சனைகள் இருப்பதனால் தொடர்ந்து பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. பெண்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும், பாதிப்புக்குளாகின்றனர் என்ற கருத்துக்களையும் வழங்கினார்.

No comments:

Post a Comment

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடிக்கை.....

பெப்ரவரி மாதம் 16,17 ஆம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கண்காட்சி, பயிற்சிப்பட்டறைகளிகளின் தொடர் நடவடி...